ETV Bharat / state

'மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சி பெற ஆதரவுக்கரம் நீட்டுவோம்'

உலக மாற்றுத் திறனாளிகள் நாளையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சி பெற ஆதரவுக் கரம் நீட்டுவோம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

Lets lend a helping hand to revive the lives of disabled said Vaiko

author img

By

Published : Dec 3, 2020, 1:53 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று உலக மாற்றுத் திறனாளிகள் நாளையொட்டி, அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

22 ஆண்டுகளுக்கு முன்பு, உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மக்கள் மன்றம் என்ற அமைப்பை நிறுவினேன். சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வுப் பணிகளை மனநிறைவுடன் செய்துவருகின்றேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கருவிகளை, மத்திய மாநில அரசுகள் இலவசமாக வழங்கிவருகின்றன. நாடாளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி இருக்கின்றேன்.

முன்னேறிய நாடுகள் பலவற்றில், பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளும் மற்றவர்களைப் போலத் தடை இன்றிச் செல்வதற்கும், பேருந்துகள், ரயில்களில் பயணிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து இருக்கின்றார்கள்.

ஆனால், இந்தியாவில் இதுவரை பொது இடங்களில் அவர்களுக்கான கழிப்பறை வசதிகள்கூட அறவே கிடையாது. அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றார்கள்.

மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லர் நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் வாழ்ந்து காட்டி, வரலாறு படைத்தார். மாற்றுத் திறனாளிகள் காலத்தால் கைவிடப்பட்டவர்கள் அல்ல, சாதிக்கப் பிறந்தவர்கள்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு, அனைத்து உரிமைகளும் பெற்று, இன்புற்று வாழ, இந்த நாளில், அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளை, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.

இதையும் படிங்க: 'திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தடையின்றி நிறைவேறும்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.