ETV Bharat / state

போராடும் உழவர்களோடு பொங்கல் கொண்டாடுவோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - பொங்கல் திருநாள்

சென்னை: போராடும் உழவர்களோடு பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம் என்று தமிழ்நாடு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது.

பொங்கல்
பொங்கல்
author img

By

Published : Jan 13, 2021, 4:25 PM IST

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ உலகம் முழுவதும் அறுவடையின் துவக்கத்தை கொண்டாடும் விழாக்கள் உள்ளன. எனினும், பொங்கல் திருநாள் என்பது இயற்கைக்கு நன்றி பாராட்டும் விழாவாகவும், பண்பாட்டு விழாவாகவும் பன்னெடுங்காலமாக தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.

சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும், உழவுத் தொழிலையும் பாதுகாக்க இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் இந்நாளில் உறுதியேற்போம்.‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்பது வள்ளுவர் வாக்கு. உழவு என்பது தொழில் மட்டுமல்ல, மக்களின் பண்பாட்டு வேரும் ஆகும்.

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால்,செயற்கையான பற்றாக்குறையும் பஞ்சங்களும் உருவாக்கப்பட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பே கேள்விக் குறியாகிவிடும்.

எனவேதான், தலைநகர் டெல்லியிலும், நாடு முழுவதும் விவசாயிகள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களின் மூலமே விவசாயத்தை மட்டுமல்ல, இந்த தேசத்தையும் பாதுகாக்க முடியும். போராடும் உழவர்களோடு இணைந்து இந்த பொங்கலை கொண்டாடுவோம்.

மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு, மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி மக்கள் வாழ்வை சீரழிப்பதோடு மாநில உரிமைகளை பறிக்க துணை நிற்கிறது. இந்த ஆட்சி அகற்றப்படுவது காலத்தின் கட்டாயமாகும். பிறந்திருக்கும் தை தமிழகத்திற்கும் ஒரு நல்ல வழியை திறக்கும் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.