ETV Bharat / state

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லியோனி நியமனம்! - CM MK Stalin

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்
author img

By

Published : Jul 7, 2021, 6:15 PM IST

சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.

இந்த கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள், மேல்நிலைப் பள்ளிக்கான தொழிற்கல்விப் பாடப்புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் பல்நுட்பக் கல்லூரிக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் திறம்பட மேற்கொண்டு வருகின்றது.

கடந்த 1960 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பாடநூல்களை மீட்டுருவாக்கம் செய்து, இணையத்தில் கொண்டு வரும் ஐந்தாண்டுத் திட்டத்தை, 2017-இல் இருந்து இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிறுவனம் பல்வேறு அரிய நூல்களை மறுபதிப்பு செய்யும் பணிகளை மேற்கொள்வதோடு, மொழி பெயர்ப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள, இந்நிறுவனத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த லியோனி, சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர் ஆவார். இவருக்கு 2010ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 5ஆம் வகுப்புக்கு ரூ.48,840 கட்டணம் - அதிர்ச்சியில் பெற்றோர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.