ETV Bharat / state

பணி வரன்முறை செய்யக் கோரி விரிவுரையாளர்கள் போராட்டம் - சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பணியாற்றும் முழுநேர தற்காலிக விரிவுரையாளர்கள் (தொகுப்பூதியம்) தங்களை பணி வரன்முறை செய்ய வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விரிவுரையாளர்கள் போராட்டம்
விரிவுரையாளர்கள் போராட்டம்
author img

By

Published : Oct 20, 2021, 5:32 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 51 அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பணியாற்றி வரும் 1,300 தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணி வரன்முறை செய்ய வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

விரிவுரையாளர்கள் போராட்டம்

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு அறிவித்தது போல் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றும் முழுநேர தற்காலிக (தொகுப்பூதியம்) விரிவுரையாளர்களும் சிறப்புத் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும்.

விரிவுரையாளர்கள் போராட்டம்

நம்பிக்கை இல்லை

பொதுவாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுதுவதற்கு படிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லாமல் இருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நம்பிக்கை இல்லை. எனவே சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க: மூத்த பஞ்சாயத்துத் தலைவியாக பதவியேற்றார் 90 வயது மூதாட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.