சென்னை: மாண்டஸ் புயல் இன்று (டிச.9) இரவு கரையைக் கடக்கவுள்ளது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் நடக்கவிருந்த சில தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது. அதேபோல், புதுச்சேரி அரசும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
அதன்படி இன்று, “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, புதுச்சேரி, காரைக்கால், கரூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி” ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.9) 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல்; கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன?