முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்:
புத்தாண்டு திருநாளாம் யுகாதி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேசும் மொழி வேறாய் இருந்தாலும், வாழம் இடம் ஒன்று, அதேவேளையில் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து, சகோதர, சகோதரிகளாய் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இப்புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் வாழ்த்துச் செய்தியில்:
தெலுங்கை தாய் மொழியாக கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது யுகாதி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் வாழ்த்துச் செய்தியில்:
தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த யுகாதி திருநாள் வாழ்வில் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் பெற்றுத்தரும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: துலிப் திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்த மோடி