ETV Bharat / state

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் இருக்கக்கூடாது என்ற உத்தரவு; தமிழ்நாடெங்கும் வலுக்கும் கண்டனங்கள் - to remove Ambedkar photos from courtroom

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்களை தவிர, அம்பேத்கரின் படங்களையும் வைக்கக்கூடாது என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 24, 2023, 9:13 PM IST

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் இருக்கக்கூடாது என்ற உத்தரவுக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

சென்னை: டாக்டர் அம்பேத்கர் மற்றும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களின் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரின் உருவப்படங்களைத் திறக்க அனுமதி கோரி பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களிடமிருந்து முதலில் கோரிக்கை பெறப்பட்டது.

இந்த கோரிக்கைகளை நிராகரித்து, கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி நடத்தப்பட்ட உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'ஆலந்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் படத்தை அகற்ற ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தும்படி காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் மோதல் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் தேசிய தலைவர்களின் படங்களும், சிலைகளும் வைக்கப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களை தவிர மற்ற தலைவர்கள் படங்களை வைக்க அனுமதிக்கக் கூடாது என 2008, 2010, 2011, 2013, 2019ஆம் ஆண்டுகளில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதை சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்ற ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தை வற்புறுத்துமாறு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி முழு நீதிமன்றம் உத்தரவிட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில் அவரது படத்தை வைக்கக் கோரிய கடலூர் வழக்கறிஞர் கோரிக்கையை நிராகரித்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதித்துறை தலைவர்களும் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அதை மீறுவோர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தகுந்த புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற பதிவுத்துறையின் இந்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்றங்களின் முன்பு இன்று (ஜூலை 24) ஆர்ப்பாட்டம் நடத்தி ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பாகவும் உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் (Madras HC circular to remove Ambedkar photos) நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Bomb threat to Koyambedu bus stand:கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.