ETV Bharat / state

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு இழப்பீடுகோரி வழக்கறிஞர் மனு - Illegal imprisonment should be avoided

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி... வழக்கறிஞர் மனு

author img

By

Published : Aug 19, 2022, 6:07 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்குப்பின் பள்ளியில் நடந்த கலவரம், தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காணக்கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை, அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளிச்செயலாளர் மிரட்டுவதாகவும், அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டுமெனவும்’ கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ’சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவதைத் தவிர்க்க, கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவர்களுக்குத் தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கும் அறிவுறுத்தும்படி உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்’ எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க:மகள் குடியுரிமையை துறக்க அனுமதி தரக்கூடாது.. தந்தையின் மனு தள்ளுபடி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.