ETV Bharat / state

எழுவர் விடுதலையில் அரசு எப்போது முடிவு எடுக்கும் - அமைச்சர் விளக்கம் - 7 convicts in Rajiv Gandhi assassination case

எழுவர் விடுதலையில் தமிழ்நாடு அரசு எப்போது முடிவெடுக்கும் எனச் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார்.

law minister ragupathi
அமைச்சர் ரகுபதி
author img

By

Published : Aug 4, 2021, 12:52 PM IST

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், அதன் இணைப்பு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யும் நிகழ்வினை சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, ’’தமிழ்நாட்டில் உள்ள 14 அரசு சட்டக் கல்லூரிகள், ஒரு சீர்மிகு சட்டக்கல்லூரி, ஒரு தனியார் சட்டக்கல்லூரி மொத்தம் 16 சட்ட கல்லூரிகளில் இரண்டாயிரத்து 275 ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை மாணவர்கள் அனுப்பும் நிகழ்வு தொடங்கியுள்ளது.

சட்டக் கல்லூரி

வரும் 26ஆம் தேதிவரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சட்டக்கல்லூரி என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகப் பாடங்கள் நடத்தப்படும். வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு சீர்மிகு சட்டகல்லூரியில் நடைமுறைப்படுத்தப்படும். எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் தெளிவான முடிவு எடுத்திருக்க வேண்டும்.

சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

ஆனால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டார். குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்திவருகிறது. அப்படி முடிவு எடுக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும்’’ என்றார்.

இதையும் படிங்க: எழுவர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.