ETV Bharat / state

தொழில்துறைக்கு வழிகாட்ட 'தொழில் நண்பன்' இணையதளம் - தொடங்கி வைத்த முதலமைச்சர்!

சென்னை: 'தொழில் வளர் தமிழ்நாடு' என்னும் பெயரில் நடைபெற்ற தொழில் துறை நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Launch website to guide the industry
Launch website to guide the industry
author img

By

Published : Dec 1, 2019, 11:42 AM IST

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ''தொழில் வளர் தமிழ்நாடு'' என்ற பெயரில், 9 தொழில் நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடம் தொடர்பாக சென்னை ஐஐடி மற்றும் டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி, மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய மூன்று துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.

மேலும் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க, மின்சார இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் ஏத்தர் எனர்ஜி, பிஒய்டி நிறுவனம் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் 5,027 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கப் பெறும் என்றும், 20 ஆயிரத்து 351 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பிறகு ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 16,359 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய ஒப்புகொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் 63 ஆயிரத்து 786 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது அமெரிக்கப் பயணத்தின்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மூன்று நிறுவனங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதேபோல் நாகை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிதாக ஐடிஐ எனப்படும் தொழில்பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

தொழில் நிறுவனங்களில் பணிபுரிய போதிய தகுதி பெற தொழிலாளர்களுக்கு உள்ள குறைபாடுகள் குறித்து அலசும் 'திறன் குறைபாடு அறிக்கை'யை (Skill gap assessment) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதேபோல், மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், Biz buddy எனப்படும் தொழில் நண்பன் இணையதளத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி துறைக்கான புதிய இலட்சினை (LOGO) மற்றும் இணைய தளத்தையும் அவர் நேற்று தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் கலந்து கொண்ட தொழில் துறை நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டிற்குத் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்குப் போதிய திறன் படைத்த தொழிலாளர்கள் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இளைஞர்களுக்கு நிறுவனங்களின் தேவைக்கேற்ப அரசின் நிதியில் பயிற்சி அளிக்கும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி 53 திட்டங்கள் தற்போது உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மேலும் 219 நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் பழனிசாமி குறித்து ரோஜா எம்எல்ஏ கருத்து!

Intro:Body:

'தொழில் வளர் தமிழ்நாடு' என்னும் பெயரில், 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட நிறுவனங்களின் திட்டங்களை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை நிகழ்சிகளை தமிழக முதலமைசர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடம் தொடர்பாக சென்னை ஐஐடி மற்றும் டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி, மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறை, போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க, மின்சார இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் ஏத்தர் எனர்ஜி, பிஒய்டி நிறுவனம் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டு மொத்தமாக ஒன்பது புரிந்துணர்வுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இதன் மூலம் 5027 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கப் பெறும் என்றும், 20 ஆயிரத்து 351 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு பிறகு ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இவை 16,359 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் 63 ஆயிரத்து 786 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அமெரிக்கப் பயணத்தின்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மூன்று நிறுவனங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதேபோல் நாகை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிதாக ஐடிஐ எனப்படும் தொழில்பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டது. தொழில் நிறுவனங்களில் பணிபுரிய போதிய தகுதிபெற தொழிலாளர்களுக்கு உள்ள குறைபாடுகள் குறித்து அலசும் 'திறன் குறைபாடு அறிக்கை'யை (Skill gap assessment) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதேபோல், மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், Biz buddy எனப்படும் தொழில் நண்பன் இணையதளத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி துறைக்கான புதிய இலட்சினை மற்றும் இணைய தளத்தையும் அவர் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,

"தமிழகத்திற்கு தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு போதிய திறன் படைத்த தொழிலாளர்களை கிடைக்கும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இளைஞர்களுக்கு நிறுவனங்களின் தேவைக்கேற்ப அரசின் நிதியில் பயிற்சி அளிக்கும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எல்படி 53 திட்டங்கள் தற்போது உற்பத்தியை தொடங்கியுள்ளன மேலும் 219 நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன" என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், "ஆட்டோமொபைல் உற்பத்தி தலைநகரமாக தமிழகம் விளங்குகிறது, நிமிடத்திற்கு ஒரு கார் உற்பத்தி செய்யப்படுகிறது, 90 வினாடிக்கு ஒரு டிரக் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் முதல் மின்சார காரான ஹுண்டாய் எலக்ட்ரிக் கோனா கார் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது. பல்வேறு துறைகளிலும் தமிழகத்தில் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபில், தலைமை செயலாளர் சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி , மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் ஏராளமான தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.Conclusion:Visual in live
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.