சென்னை தாம்பரம் சானிடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் உள்ள தொழிலாளர்களுக்காக கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இங்கு, சுமார் 3,000 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதனை செங்கல்பட்டு மாவட்ட கரோனா கண்காணிப்பு சிறப்பு அலுவலர் சமயமூர்த்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மெப்ஸ் பொருளாதார மண்டலம் மேம்பாட்டு அலுவலர்கள் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் கூறுகையில் ’’செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 71ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 20 ஆயிரம் பேருக்கு இரண்டாவது தடவையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி இருப்பில் உள்ளது. மக்கள் தானாக முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில், சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம்்’’ என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை