ETV Bharat / state

ஜெயலலிதா சொத்து விவகாரம்: தீபா மற்றும் தீபக் நேரில் ஆஜராக உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாகியை நியமிப்பது தொடர்பாக விளக்கமளிக்க தீபா மற்றும் தீபக் ஆகியோரை வரும் வெள்ளிகிழமை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மற்றும் தீபா
author img

By

Published : Aug 27, 2019, 6:41 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நிர்வாகியாக நியமிக்க வேண்டும், ஜெயலலிதாவின் சில சொத்துக்களில் பொது மக்களுக்கு சேர வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, ஜெயலலிதா இறந்த பிறகு போயஸ் தோட்ட இல்லம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தீபா மற்றும் தீபக் தரப்பு வழக்கறிஞர்கள்,ஜெயலலிதா மறைந்த பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டதாகவும், தற்போது போயஸ்தோட்ட இல்லம் மாவட்ட ஆட்சியர் கட்டுபாட்டில் இருப்பதாக தெரிவித்தனர்.

அதேபோல 1996ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கியில் ஜெயலலிதா பெற்ற இரண்டு கோடி ரூபாய், தற்போது வட்டியுடன் 20 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாகவும் வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாகியை நியமிப்பது தொடர்பாக விளக்கமளிக்க தீபா மற்றும் தீபக் ஆகியோரை வரும் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Intro:Body:ஜெயலலிதா சொத்துக்களை நிர்வாகிக்க நிர்வாகியை நியமிப்பது தொடர்பாக விளக்கமளிக்க தீபா மற்றும் தீபக் ஆகியோரை வரும் வெள்ளிகிழமை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்ம வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நிர்வாகியாக நியமிக்க வேண்டும், ஜெயலலிதாவின் சில சொத்துகளில் பொது மக்களுக்கு சேர வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஜெயலலிதா இறந்த பிறகு போயஸ் தோட்ட இல்லம் யார் கட்டுபாட்டில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, ஜெயலலிதா மறைந்த பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டதாகவும், தற்போது போயஸ்தோட்ட இல்லம் மாவட்ட ஆட்சியர் கட்டுபாட்டில் இருப்பதாக தீபா மற்றும் தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கியில் ஜெயலலிதா பெற்ற 2 கோடி ரூபாய், தற்போது வட்டியுடன் 20 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஜெயலலிதா சொத்துக்களை நிர்வாகியை நியமிப்பது தொடர்பாக விளக்கமளிக்க தீபா மற்றும் தீபக் ஆகியோரை வரும் வெள்ளிகிழமை நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.