நல்லடக்கம் செய்யப்பட்டார், கம்பீரக் குரலோன் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். 'இந்த தேகம் மலர்ந்தாலும், இசையாய் மலர்வார், எஸ்.பி.பி' எனும் நம்பிக்கையில் ரசிகர்களும் குடும்பத்தினரும் கண்ணீருடன் அங்கிருந்து விடைபெற்றனர்.
பாடும் நிலா பாலுவின் உடல் நல்லடக்கம்: ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி! - spb hit songs
12:58 September 26
12:31 September 26
கம்பீரக் குரலோன் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, சடங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.
12:08 September 26
எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்த விஜய் நேரில் வருகை தந்துள்ளார். இதனைத் தொடர்ந்து எஸ்.பி.பி-க்கு 24 காவலர்கள் தலா 3 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.
11:49 September 26
இன்னும் சற்றுநேரத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படயிருக்கிறது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மனம் உருக கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
11:44 September 26
எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்ய சிறப்பு பாதுகாப்புப் படையினரால் தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
11:40 September 26
எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் பங்கேற்றுள்ளார்.
11:34 September 26
எஸ்.பி.பியின் உடலுக்கு அவரது நெருங்கிய ரத்த சொந்தங்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
11:29 September 26
எஸ்.பி.பியின் உடல் தகனம் செய்யப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
11:13 September 26
எஸ்.பி.பியின் உடலுக்கு அரசு மரியாதை செய்வதற்காக காவல் துறையினர் வருகை தந்துள்ளனர்.
11:10 September 26
எஸ்.பி.பியின் உடலுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் அஞ்சலி செலுத்தினார்
10:28 September 26
தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் உடலுக்கு பொதுமக்கள் செய்துகொண்டு இருந்த இறுதி அஞ்சலி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எஸ்.பி.பிக்கு இறுதிச்சடங்குகளை அவரது உறவினர்கள் செய்து வருகின்றனர்.
08:47 September 26
இயக்குநர் பாரதிராஜா தாமரைப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாடகர் மனோ எஸ்.பி.பிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். பின் அங்கு வருகை தந்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேவிஸ்ரீபிரசாத், 'எஸ்.பி.பியின் மறைவு, இசைத்துறைக்கு பேரிழப்பு' என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
08:40 September 26
வரிசையாக மக்கள் எஸ்.பி.பியின் உடலுக்கு சமூக இடைவெளியுடன் அஞ்சலி செலுத்தும் வண்ணம் கயிறுகள் கட்டப்பட்டுள்ளன. அஞ்சலி செலுத்த வருவோருக்கு முகக்கவசம் கட்டாயம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
08:35 September 26
எஸ்.பி.பியின் உடலுக்கு தாமரைப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொருவராக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
08:22 September 26
எஸ்.பி.பியின் உடலுக்கு இசையமைப்பாளர் தினா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
08:05 September 26
எஸ்.பி.பியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என்று கூறினாலும், தொடர்ந்து தாமரைப்பாக்கம் பண்ணைவீட்டின் முன் மக்கள் கூடி வருகின்றனர்.
07:51 September 26
'ஐந்து டிஎஸ்பிக்கள் தலைமையில் 500 காவலர்கள் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி'- திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் பிரத்யேகமாகப் பேட்டி
07:48 September 26
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எஸ்.பி.பியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
06:52 September 26
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.