அண்ணா பல்கலைக்கழகத்தில் 2001ஆம் ஆண்டு முதல் இளங்கலை பொறியியல், இளங்கலை தொழில்நுட்பவியல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளை முடிக்காமல் தோல்வியடைந்தவர்கள் தேர்வு எழுதுவதற்கான இறுதி வாய்ப்பினை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
இது குறித்து அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '2001ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல், இளங்கலை தொழில்நுட்பவியல் படிப்புகளில் தோல்வியடைந்தவர்கள் வரும் ஏப்ரல், மே மாதம் நடைபெறவுள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடைசி வாய்ப்பினை வழங்கியுள்ளதாகவும், தேர்வு எழுதுவதற்கு மார்ச் 23ஆம் தேதிக்குள் www.coe1.annauniv.edu என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திரைப்படங்களும் எங்களுக்குப் பாடம்தான்: அசத்தும் காமராசர் பல்கலைக்கழக தொடர்பியல் துறை மாணாக்கர்