ETV Bharat / state

'நான் பாஜகவில் சேரவே இல்லை, அப்புறம் எப்படி விலக முடியும்?' - லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி

author img

By

Published : Jan 8, 2023, 10:55 PM IST

நான் பாஜகவில் சேரவே இல்லை, அப்புறம் எப்படி வெளியே வர முடியும் என நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பாஜகவில் சமீப காலமாக ஆடியோ விவகாரம் மூலம் உட்கட்சிக்குள் மோதல் ஏற்பட்டு, கட்சியில் இருந்து பலர் விலகுவதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவியாக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் விலகினார்.

"பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" எனக் கூறி அண்ணாமலை மீது குற்றச்சாட்டை வைத்திருந்தார். இதற்குப் பதில் அளித்த நடிகை குஷ்பூ, "பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது" எனக் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜவில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.

  • I never joined #BJP then how can I come out? This is the quality of journalism these days, distorting, misquoting ! What @annamalai_k said in the argument is right , unless media develops some discipline, they don’t have eligibility to question others. @AMuktharAhmed1 pic.twitter.com/Zy83qu0YwJ

    — Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த தகவல் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"நான் பாஜகவில் சேரவே இல்லை, அப்புறம் எப்படி வெளியே வர முடியும்?. இதுதான் இன்றைய பத்திரிகையின் தரம். திரித்து, தவறாக மேற்கோள் காட்டுவது. இந்த விவகாரத்தில் அண்ணாமலை சொன்னது சரிதான். ஊடகங்கள் சில ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளாத வரை, மற்றவர்களை கேள்வி கேட்கும் தகுதி அவர்களுக்கு இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாஜக கூட்டத்தில் கோஷ்டி மோதல்; நாற்காலிகளால் தாக்கிக்கொண்ட பரபரப்பு வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.