ETV Bharat / state

ராமர் கோயில் பூமி பூஜை நாள் -  ட்விட்டரில் ராவணனை உச்சிமுகர்ந்த தமிழர்கள்!

சென்னை: ராமர்கோயில் பூமி பூஜையை ஒட்டி ட்விட்டரில் #TamilsPrideRavanaa #LandOfRavana என்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.

ராவணன் ட்ரெண்ட்  ட்விட்டரில் ட்ரெண்டாகும் ராவணன்  ராவணன் ஹேஸ்டேக்  ravanan hastag  ramar temple
ராமர் கோயில் பூமி பூஜையை யொட்டி ட்விட்டரில் ட்ரெண்டாகும் ராவணன்
author img

By

Published : Aug 5, 2020, 5:48 PM IST

Updated : Aug 5, 2020, 6:16 PM IST

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக சமூக வலைதளங்களிலும் ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளின் கீழ் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தச்சூழ்நிலையில், #TamilsPrideRavanaa #LandOfRavana என்ற ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளன. இந்த ஹேஸ்டேக்குகளின் கீழ், கருத்துகளைப் பதிவிட்டவர்கள் பெரும்பாலும் தமிழர்களாக உள்ளனர். ராவணன் குறித்து படத்தில் பேசப்பட்ட காட்சிகள், அரசியல் தலைவர்கள் பேசிய பேச்சுகள், ராமரை விமர்சித்த பேச்சுகள் உள்ளிட்டவற்றை இந்த ஹேஸ்டேக்குகளின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

  • கலை பத்தில் தலைசிறந்த,
    திசை எட்டும் புகழ்கொண்ட

    தமிழ்ப் பெரும்பாட்டன்!

    வீர இராவணன் பெரும்புகழ் போற்றி! போற்றி!#TamilsPrideRavanaa pic.twitter.com/EvwAiTkvdk

    — சீமான் (@SeemanOfficial) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ராமனுக்கு எதிராக ராவணனை முன்னிறுத்துவது தமிழ்நாட்டிற்கோ, தமிழர்களுக்கோ புதிதல்ல. ராவணன் வாழ்ந்ததாக கருதப்படும் தென்திசை நோக்கி அம்புகளை மக்கள் எய்தியும், ராவணனின் உருவ பொம்மையை எரித்தும் வடமாநிலத்தில் 'ராம லீலா' கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்வினையாக பெரியார் திடலில், 1974ஆம் ஆண்டு மணியம்மை தலைமையில் 'ராவண லீலா' நடத்தப்பட்டது. அதில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. ராவணன், கும்பகர்ணன் ஆகியோர் வீரர்களாக காட்டப்பட்டனர்.

ராமாயணத்தை தமிழ்நாட்டில் ஏற்போரும் உண்டு; எதிர்ப்போரும் உண்டு. ராமாயணத்திற்கு எதிராக தமிழில் ராவண காவியமும் எழுதப்பட்டுள்ளது. ஆரியர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரான இந்தப் பண்பாட்டுப் போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

  • எங்க பத்து தல இராவணன் சிரிச்சு பாத்ததில்லையே இந்தா வாங்கிக்கோ 😘😘😘😘

    There is no evidence that a person named Rama existed or he studied engineering or he built any bridge... 😂😂😂😂 #LandOfRavana #TamilPrideRavanaa #LandOfRavanan pic.twitter.com/JD6I3LfSc4

    — திராவிட அரக்கன்© (@Arakkantweets) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தப் பண்பாட்டுப் போரின் தொடர்ச்சியாகவும், தமிழ்ச்சமூகம் ராவணனைக் கொண்டாடும் உள்ளார்ந்த உளவியலின் வெளிப்பாடாகவும் தமிழர்கள் இந்த ஹேஸ்டேக்குகளைப் பதிந்து, அதன் அருகில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர் என்றே கூறலாம்.

இதையும் படிங்க:''ராவணன் தமிழ்ச் சமூகத்தின் தலைவன்'' - திருமாவளவன்

Last Updated : Aug 5, 2020, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.