இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரியைத் தூர் வாரி, கரைகளை பலப்படுத்தி, மதகுகளை சீரமைத்து, நீரைச் சேமிக்க அரசு சார்பில் ரூ. 25 கோடி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்.
இதை நடைமுறை படுத்துவதற்காக சுற்றுசூழல் துறை முதன்மை இயக்குநர் அளித்த பரிந்துரையின் பேரில், நிதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியை புனரமைத்து சீர்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கூடிய விரைவில் சிட்லபாக்கம் ஏரி புதுப்பொலிவு பெறும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க:
6 மாவட்ட ஆட்சியர்கள் உடன் தேர்தல் ஆணைய தலைமை அலுவலர் கலந்தாய்வுக் கூட்டம்