ETV Bharat / state

பெண் காவலர் தற்கொலை - பெண் காவலர்

சென்னை: திருவொற்றியூரில் பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

lady police
lady police
author img

By

Published : Oct 22, 2020, 1:40 PM IST

ஆவடி சிறப்பு ஆயுதப்படை போலீசில் பெண் போலீசாக பணியாற்றியவர் பாக்யஸ்ரீ(வயது 28). இவருடைய கணவர் முரளி. இவர், தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இவர்களுக்கு கௌசிக்(5), நவ்சிக்(2) என 2 மகன்கள் உள்ளனர்.

திருவொற்றியூர் மதுரா நகரில் வசித்துவந்த முரளியின் தந்தை கடந்த 2 நாட்களுக்கு இறந்து விட்டார். இதனால் முரளி, தனது மனைவி பாக்யஸ்ரீ மற்றும் மகன்களுடன் திருவொற்றியூர் மதுரா நகரில் வந்து தங்கியிருந்தார்.

நேற்று காலை பாக்யஸ்ரீ, வீட்டின் மாடிக்கு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த முரளி, மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு தனது மனைவி பாக்யஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அருகில் அவரது செல்ஃபோன் இருந்தது. அதில் பாக்யஸ்ரீ, தற்கொலை செய்வதற்கு முன்பாக, எனக்கு முதுகுவலி, வயிற்று வலி இருப்பதால் தற்கொலை செய்துகொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என வீடியோ பதிவு செய்தது இருந்தது.

இதுகுறித்து சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்த பாக்யஸ்ரீ உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.