ETV Bharat / state

'வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது' - கமல்

author img

By

Published : Apr 20, 2021, 5:01 PM IST

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு குறைபாடு, சந்தேகத்துக்குரிய செயல்பாடுகள் நடைபெறுகின்றன என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Lack of security and suspicious activities are taking place where the voting machine is kept said mnm chief kamalhasaan

சென்னை தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு குறைபாடு சந்தேகத்துக்குரிய செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்ற புகார் மனுவை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவிடம் அளித்தார்.

பின்னர் இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் போதிய நம்பகத்தன்மை இல்லை.

அந்த அறையை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு தன்னிச்சையாகவே செயலிழப்பது, இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கன்டெய்னர் லாரிகள் வருவது, இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு லேப்டாப்புடன் நபர்கள் வருவது உள்ளிட்டவை அச்சத்தை ஏற்படுத்தியது. வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பதற்கான விதிமுறைகளை சரியாகப் பின்பற்றப்படவில்லை.

ஜனநாயகத்தில் வாக்களிப்பவர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் போன்றோர் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டின் மூலமாக நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கடமை. வாக்காளர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் உள்ளனர்.

வாக்குப்பதிவின் போதும் வாக்கு எண்ணிக்கையின் போதும் ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 75 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. வாக்குபதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்லும் நிலை தற்போது உள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வெளிப்படைத்தன்மையாகவும் திருப்திகரமாகவும் இல்லை" என்றார்.

மேலும், நடைபெற்று முடிந்த தேர்தலில் நடிகர்கள் வாக்களிக்க வந்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.