சென்னை: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரை உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர் சங்கத்தின் மாநில தலைவர் தேவிசெல்வம் சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 6 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். 100 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற நிலையில் 500 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் மட்டுமே உள்ளனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால் மாணவர்களுடைய விளையாட்டு திறனை முழுமையாக பயன்படுத்த இயலவில்லை. விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை போதுமான அளவில் அரசு நிரப்ப வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மீராமிதுனை கைது செய்ய வேண்டும் - வன்னியரசு வலியுறுத்தல்