சென்னை: துறைமுகம் ராஜாஜி சாலையில் வைக்கப்பட்டுள்ள வ.உ.சி.யின் திருவுருவப் படத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "75ஆவது சுதந்திர தினம் நிறைவடைந்து 76ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். நாட்டின் 100ஆவது சுதந்திர நாளில் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக எடுத்துச் செல்ல உள்ளார்.
இந்த தருணத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வ.உ.சி.யின் 151ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புகழஞ்சலி செலுத்துவதில் பெருமை" எனக் கூறினார்.
இதையும் படிங்க:தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்