சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து குஷ்பு போட்டியிடுகிறார்.

வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து குஷ்பு தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். காலை, மாலை என வாக்கு சேகரித்து வரும் குஷ்புவிற்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பொதுமக்களை அவர்களின் இல்லத்திற்கே சென்று தான் போட்டியிடும் தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி குஷ்பு கேட்டுக்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று (மார்ச் 29) கோடம்பாக்கம் பகுதியில் இருக்கும் டிரஸ்ட்புரம் 1ஆவது தெருவிலிருந்து 10ஆவது தெருவரை வீதி வீதியாக சென்ற குஷ்பு தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: நாளை தாராபுரத்தில் மோடி பிரச்சாரம்!