ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு! - chennai latest news

2022ஆம் ஆண்டிற்கான 'அய்யன் திருவள்ளுவர் விருது' மு. மீனாட்சி சுந்தரத்திற்கும், “பெருந்தலைவர் காமராசர் விருது’ குமரி அனந்திற்கும் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு!

author img

By

Published : Jan 15, 2022, 4:17 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் நெறிபரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டு புரிந்துவருபவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டுவருகிறது.

அந்தவகையில், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவராக இருந்தவர் பெங்களூருவில் வசிக்கும் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மு. மீனாட்சி சுந்தரம் (78). இவருக்குத் தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.

2009ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையில் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் மு. மீனாட்சி சுந்தரம். இவர், கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி, திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியுள்ளார்.

அதேபோன்று, தமிழ் இலக்கியவாதியாகவும் சிறந்த நூல்களைப் படைத்தவரும் பன்முகத் திறன்கொண்ட சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தனக்கு (88) தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை வழங்குகிறது.

பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் குமரி அனந்தன். நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விகளைக் கேட்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இலக்கியங்களில் புலமையும் பேச்சாற்றலும் மிக்கவர்.

விருதுபெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஒரு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இவ்விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை - பென்னிகுயிக் பிறந்த நாளில் ஸ்டாலின் செய்த மரியாதை...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.