ETV Bharat / state

'கடவுள் தவறு செய்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது' - கே.எஸ். அழகிரி - k s alagiri

சென்னை: வசந்தகுமாரின் மறைவை பார்க்கும்போது, கடவுள் தவறு செய்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி  வசந்தகுமார்  வசந்தகுமார் மறைவு  k s alagiri  vasanthakumar mp
'கடவுள் தவறு செய்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது'- கே.எஸ். அழகிரி
author img

By

Published : Aug 29, 2020, 7:52 PM IST

கரோனா பெருந்தொற்று காரணமாக காலமான எச். வசந்தகுமாரின் உடலுக்கு மலர் மாலை வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி மரியாதை செய்தார். இதன்பின்பு செய்தியார்களிடம் பேசிய அவர், "பெருந்தலைவர் காமராஜர் மீது பற்றும், பாசமும், பக்தியும் கொண்டவர் வசந்தகுமார்.

பெருந்தலைவரின் கொள்கையை பின்பற்றி வாழும் காமராஜராக வாழ்ந்துகொண்டிருந்தார். வசந்தகுமாரின் மறைவு மற்றவர்களுக்கு இயல்பானதாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சிக்கு அப்படி அல்ல. கடவுள் தவறு செய்கிறாரா என்று எண்ணும் அளவுக்கு எங்களுடைய சிந்தனை செல்கிறது. அவருடைய புகழ் ஓங்கவேண்டும்.

வசந்தகுமார் கடுமையான உழைப்பாளி. கடும் உழைப்பால்தான் அவர் வளர்ந்தார். அவருடைய புகழும், செயலும் நிலைத்து நிற்கும். அவரின் உடலுக்கு மரியாதை செய்ய இன்று (ஆகஸ்ட் 29) காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் முகுல் வாஸ்னிக்கும், நாளை (ஆகஸ்ட் 30) அவரின் உடல் நல்லடக்கத்தின்போது மரியாதை செய்ய காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் வேணுகோபாலும் வருகிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: 'பனங்காட்டில் பிறந்து உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார்' - பாரதிராஜா இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.