ETV Bharat / state

மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் டெண்டர் அறிவிப்பு: ரத்து செய்ய காங்கிரஸ் எம்.பி கோரிக்கை

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான டெண்டரை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Krishnagiri Congress Mp challenge granite tender, petition moved

author img

By

Published : Nov 3, 2020, 3:52 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய தாலுகாகளுக்கு உள்பட்ட 18 கிராமங்களில் கறுப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான ஏல டெண்டர் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர், அக்டோபர் 9ஆம் தேதி அறிவித்தார். இதுதொடர்பாக அக்டோபர் 17ஆம் தேதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.

கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுரங்கங்கள் துறையிடமிருந்தும் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே மாநில அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விதிகள் உள்ள நிலையில், அப்படிப்பட்ட அனுமதிகளை பெறாமல் பிறப்பிக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் பெறப்பட வேண்டும். வழிகாட்டுதல்களுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

வரும் 7ஆம் தேதி டெண்டர் திறக்கப்பட இருப்பதால் இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுக்கக்கோரி நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் செல்லக்குமார் தரப்பு வழக்கறிஞர் முருகேந்திரன் முறையீடு செய்தார்.

முறையீட்டை கேட்ட நீதிபதிகள் ஓரிரு நாள்களில் வழக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.