கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாளை ஆகஸ்ட் 30ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடவுள்ள நிலையில், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, "உயிர்களைக் காத்து உலகாளும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், எங்கள் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பும், அமைதியும், இனிமையும் எங்கும் பெருக வேண்டும்
கிருஷ்ணர் அவதரித்த இந்த நாளில் குழந்தைகளை ஸ்ரீகிருஷ்ண பகவான்போல அலங்கரித்தும், அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்தும் கால் தடங்களை வாசலில் பதிய வைத்தும் பெற்றோர் கொண்டாடுவர்.
இந்த நாளில் அன்பும் அமைதியும் இனிமையும் எங்கும் பெருக வேண்டும் என எங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்து, எங்களது உளங்கனிந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'அவசர அவசரமாக பள்ளிகளைத் திறக்க வேண்டாம்' - எய்ம்ஸ் பேராசிரியர்