ETV Bharat / state

தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பு.. PST நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு தயங்குவது ஏன்? - அறப்போர் இயக்கம் சரமாரி கேள்வி! - complaint against PST company

கேபி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்திற்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டியது தரமற்ற நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அரசு உடனடியாக PST மற்றும் ஊழல் செய்த பொது ஊழியர்கள் மீது கிரிமினல், துறை நடவடிக்கை எடுப்பதுடன், உயர் நீதிமன்ற இடைக்கால தடை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 21, 2023, 6:52 PM IST

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைபாளர் ஜெயராம் வெங்கடேசன்

சென்னை: புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் ஏற்கனவே இருந்த பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு 864 வீடுகள் கட்டுவதற்கு 2018ஆம் ஆண்டில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்றது. இந்த கட்டுமானப் பணிகள் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது பயனாளிகள் தங்கள் பங்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேணடும் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் 864 வீடுகளும் தரமற்ற நிலையில் இருப்பதாக 2021 ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, தாமோ. அன்பரசன் ஆகியோர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தாெடர்ந்து கட்டடத்தின் உறுதித்தன்மையை சென்னை ஐஐடி பேராசிரியர்கள் குழுவின் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி நுட்ப நகரத்தின் முதல் திட்டமானது, 56.48 ஏக்கர் நிலப்பரப்பில், நில மேம்பாடு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளுவதற்கான திட்டம் ஆகும். நில மேம்பாடு, உட்புற சாலைகள், மழைநீர் வடிகால் வசதிகள், வெள்ளத் தடுப்புச்சுவர், குடிநீர் மற்றும் மறுசுழற்சி நீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள், பாதுகாப்பு வசதிகள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் இதில் மேற்கொள்ளப்படும்.

மின்னணு ஒப்பந்தப்புள்ளி தேர்வின் அடிப்படையில், துறை மதிப்பைவிட 16.34 விழுக்காடு குறைவாக அதாவது, 82.87 கோடி ரூபாய் (ஜிஎஸ்டி உட்பட) மதிப்பீட்டில் நிதிநுட்ப நகர திட்டத்திற்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான பணி ஆணை PST நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைபாளர் ஜெயராம் வெங்கடேசன் 17ஆம் தேதி ஊழில் செய்த நிறுவனத்திற்கு மீண்டும் திமுக ஆட்சியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என விரிவாக குற்றச்சாட்டை பதிவு செய்தார். அதில், “அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து ஒரு தரமில்லாத கட்டடத்தை KP Park பகுதியில் கட்டி அது பல இடங்களில் இடிந்து விழுந்து, மக்கள் உயிருக்கு பயந்து, புகார் அளித்த பிறகு திமுக அமைச்சர்கள் ஆய்வு செய்து வீர வசனம் பேசி, IIT மூலம் ஆய்வு செய்து அது தரமற்ற கட்டுமானம் என்று உறுதி செய்த பிறகு, திமுக அரசு மற்றும் தமிழக முதல்வர் என்ன செய்திருக்கணும்?

அதை கட்டிய நிறுவனம் மீது FIR போட்டிருக்கணும். அந்த நிறுவனத்தை Blacklist செய்திருக்கணும். அந்த தரமற்ற கட்டுமானத்தை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கணும். ஆனால் செய்தார்களா? இல்லையே. அப்போ என்ன தான் செய்தார்கள்? அதே PST நிறுவனத்தை அழைத்து பல கோடி மதிப்புள்ள FINTECH CITY கட்டுமானத்தை அளித்திருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒன்று, ஊழல் செய்யும் நிறுவனம் என்று தெரிந்தும் இந்த பொறுப்பை ஒப்படைக்கும் அளவிற்கு அறிவு கெட்ட அரசாக இருக்க வேண்டும்.

அல்லது, மக்கள் என்ன நினைத்தாலும் எங்களுக்கு அக்கறை இல்லை நாங்கள் ஊழல்வாதிகளுக்கு தான் ஆதரவு கொடுப்போம் என்று செயல்படும் திமிர் பிடித்த அரசாக இருக்க வேண்டும். இதை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? அப்படி ஒரு காரணம் இருந்தால் அதை வீர வசனம் பேசிய அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அன்பரசன் ஆகியோர் மக்களுக்கு விளக்கம் அளிக்கட்டும்” என தெரிவித்திருந்தார்.

அதேபோல் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மாநிலச் செயலாளர் அண்ணாமலை உள்ளிட்டவர்களும் ஊழல் பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கலாமா? என கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்று அளிக்கப்பட்ட விளக்கத்தில், பிஎஸ்டி நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமனத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், குறைபாடுகள் நிருபிக்கப்பட்டால், தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறும்போது, “PST நிறுவனம் மீதி FIR போட்டு விசாரித்து அவர்களை Blacklist செய்யும் வரை விடப்போவதில்லை. நேற்றைய தினம் அரசு கொடுத்த பத்திரிகை செய்தியில் கருப்பு பட்டியல் குறித்த உயர்நீதிமன்ற இடைக்கால தடை குறித்து குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் FIR கிரிமினல் நடவடிக்கைக்கோ ஊழல் செய்த அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கைக்கோ எந்த தடையும் இல்லை. ஆனால் இன்று வரை அதை கூட செய்யவில்லை. அறப்போர் லஞ்ச ஒழிப்பு துறையில் ஐஐடி அறிக்கையுடன் சேர்த்து புகார் கொடுத்து 1.5 ஆண்டுகள் ஆகியும் இது வரை FIR கூட பதிவு செய்யப்படவில்லை.

ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படாமல் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் தலைமை பொறியாளர் போன்ற உயர் பதவியில் இருந்துகொண்டு அவர்களின் ஊழல் கூட்டாளி PST மீது எப்படி உயர்நீதி மன்றத்தில் சரியான தகவல்களை வைத்து கருப்பு பட்டியல் சம்பந்தமான இடைக்கால தடையை நீக்குவார்கள் ?? அரசு உடனடியாக PST மற்றும் ஊழல் செய்த பொது ஊழியர்கள் மீது கிரிமினல், துறை நடவடிக்கை மற்றும் உயர்நீதிமன்ற இடைக்கால தடை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

அதேபாேல் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறும்போது, “PST கட்டுமான நிறுவனத்திற்கு நிதிநுட்ப பூங்கா கட்டும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது குறி்த்து த‌மிழ்நாடு அரசு அளித்திருக்கக்கூடிய விளக்கம் வியப்பையும், திகைப்பையும் அளிக்கிறது. கருப்பு பட்டியலில் இல்லாத ஒரு நிறுவனம் குறைவான தொகையை ஒப்பந்த புள்ளியில் குறிப்பிட்டதால் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணி கூட அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே அந்த நிறுவனம் மேற்கொண்ட கட்டுமானங்கள் குறித்த புகார்களை விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளது, அரசின் அலட்சியத்தையும், அவசரத்தையும், பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாடு அரசு துறைகளின் கட்டுமானங்களில் தான் இந்த நிறுவனம் குறித்த புகார்கள் எழுந்துள்ளன எனும் நிலையில் அந்த புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை. ஆனால், அதை செய்யாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்த பணியை குறிப்பிடுவதும், நீதி மன்ற தடை உத்தரவை காரணம் காட்டுவதும் தமிழ்நாடு அரசின் அலட்சியத்தையும், உள்நோக்கத்தையும் தெளிவாக்குகிறது.

முன்பு இருந்த அரசு தான் காரணம் என்று சொல்லி விட்டு மீண்டும் அதே தவறை இழைப்பது நியாயமல்ல. குற்றமிழைத்தவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்த முயற்சிப்பதில் காட்ட வேண்டிய வேகத்தை அடுத்தவர் மீது குறை சொல்லி, பழி போட்டு தப்பிக்க நினைப்பது முறையல்ல. உடன் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பதே மக்கள் நலனுக்கு உகந்தது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "செந்தில் பாலாஜியின் மருத்துவ கண்காணிப்பு குறித்து மருத்துவர்கள் தான் கூற வேண்டும்" - அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.