சென்னை: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 100அடிச் சாலை- காளியம்மன் கோயில் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ரூ. 94 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட பணிகள், ஏறக்குறைய 90 விழுக்காடு முடிவுற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கோயம்பேடு மேம்பாலப் பணிகள் முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு மேம்பாலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிக்கு முன் மேம்பாலத்தைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மேம்பாலத்தை திறந்து வைப்பார் என தெரிகிறது.
இதே போல் வேளச்சேரி உள்ளிட்ட மேம்பாலப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: கோயம்பேடு மேம்பாலம் கட்டுமான பணி எப்போது நிறைவுபெறும்?