தற்போது மாறிவரும் உணவுப் பழக்கம், பணி நேரம் மாறுதல் உள்ளிட்ட காரணங்களால் உடல் எடை அதிகரிப்பதை தாழ்வு மனப்பான்மையாக இளைஞர்கள் கருதுகின்றனர். இதனால் பல நிறுவனங்கள் ஒல்லியான உடலமைப்புதான் அழகு என்ற பிம்பத்தை ஊடங்களின் விளம்பரங்கள் வாயிலாக எதிரொலிப்பதால் உடல் எடைக் குறைப்பு என்பது மிகப்பெரிய வியாபாரமாக உருவாகியுள்ளது.
சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் உடல் எடை குறைப்பு மையங்கள் அதிகளவில் செயல்பட்டுவருகின்றன. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக இந்த மையங்கள் செயல்பட்டு கல்லா கட்டிவருகின்றன. இதில் முக்கியமாக சென்னை உள்பட பல நகரங்களில் செயல்படும் கலர்ஸ் உடல் எடைகுறைப்பு நிலையங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக இன்று வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஹைதராபாத்திலிருந்து வந்துள்ள வருமானவரித் துறை அலுவலர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள கலர்ஸ் உடல் எடை குறைப்பு நிறுவனத்தின் 50-க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் மட்டும் ஆறு இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.
அதேபோல் தமிழ்நாட்டில் சேலம், கோவை, வேலூர், திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள கலர்ஸ் அலுவலங்களில் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கல்கி ஆசிரம சோதனை நிறைவு: ரூ.800 கோடி, 4000 ஏக்கர் நிலம்...! - வாயைப் பிளக்கும் பக்தர்கள்