ETV Bharat / state

பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்கள்: கையும் களவுமாக பிடித்த மக்கள் - chain snatchers arrested at chennai

சென்னை: கொடுங்கையூரில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

kodungaiyur chain snatchers caught by public and arrested

author img

By

Published : Jun 12, 2021, 2:39 AM IST

சென்னை கொடுங்கையூர் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகா (26). இவர் நேற்று (ஜூன் 11) காலை கடைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவர் அணிந்திருந்த ஐந்து சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

இதனையடுத்து அம்பிகா கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேரையும் பிடித்து கொடுங்கையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் நகையை திருடிய நபர்கள் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த முரளி (22), சேகர் (24) என்பது தெரியவந்தது.

இவர்கள் மீது கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட காவல்நிலையங்களில் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கொடூர துரோகத்தை மனைவிக்கு செய்த கணவன் - நண்பர்கள் உள்பட மூவர் கைது!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.