சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான கோடியேரி பாலகிருஷ்ணன், நேற்று (அக் 1) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்ற, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில் அவரது உடல், இன்று (அக். 2) சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே சென்னை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அதன் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்