பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் புவனேஷ் (25). இவர் அண்ணாசாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அண்ணாசாலை மசூதி அருகே சென்ற போது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் இவரது கழுத்தை அறுத்துள்ளது. இதனால் நிலை குலைந்த அவர் வாகனத்திலிருந்து கீழே விழுந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவருக்கு 14 தையல்கள் போடப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் உயிரிழந்த முதல் மருத்துவர்