ETV Bharat / state

இரத்த வகை பொருந்தாமல் சிறுநீரக மாற்று சிகிச்சை.. சாத்தியமானது எப்படி? - சிறுநீரக மாற்றம்

இருவேறு ரத்த வகையை கொண்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இரத்தம் பொருந்தாமல் சிறுநீரகத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய கீழ்பாக்கம் மருத்துவமனை

author img

By

Published : Dec 11, 2022, 9:38 AM IST

சென்னை: ஜானகி (42) (B+) திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். 8 வயதில் சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு அறுவை சிகிச்சை செய்து கல் அகற்றப்பட்டது. அதன் பிறகு 2020 வரை முற்றிலும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளார்.

சமீபகாலமாக மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. பின்னர் அவருக்குச் சிறுநீரகம் செயல் இழந்ததால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸில் செய்து வந்துள்ளார். அவரது கணவர் சரவணன் (AB+) தனது மனைவிக்குச் சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார், ஆனால் அவரது இரத்த வகை பொருந்தவில்லை.

இந்த நிலையில் சிறப்பு அறுவை சிகிச்சை மூலம் ஆன்ட்டிபார்டிசை (antibiotics) வெளியேற்றப்பட்டு அந்த சிறுநீரகத்தை தானம் செய்ய போதுமான நோய் எதிர்ப்பு தயாரிப்புக்குப் பிறகு, இரண்டு வெவ்வேறு ரத்தக் வகைகளுக்கு இடையே கடந்த 30 தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜானகி தற்போது நலமுடன் உள்ளார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திட்டம் 2000 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், ஜானகிக்குச் செய்யப்பட்டது, 200 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருப்பத்தூர் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மீது தாக்குதல் - மனைவி புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.