ETV Bharat / state

ஒரே நாளில் 2 பேருக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையளித்து சாதனை - சிறுநீரக அறுவை சிகிச்சை

மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்தைப் பெற்று ஒரே நாளில் 2 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஒரே நாளில் 2 பேருக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையளித்து சாதனை

author img

By

Published : Apr 27, 2022, 6:49 PM IST

Updated : Apr 28, 2022, 4:22 PM IST

சென்னை: அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளைப் பெற்று, முதல்முறையாக ஒரே மருத்துவமனையில் 2 பேருக்கு ஒரே நாளில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்ததால், சிறுநீரகம், கணையம், கண் பெற்று 4 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

மூளை சாவில் இறந்தவரின் உடல் தானம்: இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர் கூறும்போது, ”சென்னையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட 31 வயது ஆண் , தலையில் பலத்தக்காயத்துடன் வந்தவருக்கு நரம்பியல்துறை நிபுணர்கள் அறுவை சிகிச்சை அளித்தனா். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். மேலும், அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடையும் நோயாளிகளை கண்டறிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையின் விதிமுறைகளின் படி , அவரின் மூளை மெல்ல செயலிழந்து வருவதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. அந்த நோயாளியின் பெற்றோரின் அனுமதியுடன் 2 சீறுநீரகங்கள், கணையம், கண் ஆகியவை தானமாக பெறப்பட்டன.

ஒரே நாளில் 2 பேருக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையளித்து சாதனை

ஒரே நாளில் இருவருக்கு அறுவை சிகிச்சை: உடல் உறுப்பு தானம் பெறும் அரசு மருத்துவமனையில் ஒரு உறுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதியின்படி 28 வயது பெண்ணிற்கு முதலில் ஒரு சிறுநீரகம் மாற்று அறுவை செய்யப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு நோயாளிக்கு பொருத்த முடியததால், மீண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. ஏற்கனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 39 வயது பெண்மணிக்கு பொருந்தியதால், உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஒரே நாளில் 2 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக செய்துள்ளது. மேலும் மூளைச்சாவு அடைந்தவரின் கணையம் ஸ்டான்லி மருத்துவமனைக்கும், கண் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நோய் வராமல் பாதுகாப்புடன் இருப்பது சிறந்ததாகும்” எனத் தெரிவித்தார்.

200க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள்: சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைத்துறையின் பேராசியர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ” மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கிடைத்தவுடன், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ஏற்கனவே காத்திருந்த 28 வயது பெண்மணிக்கு முன்னுரிமைப் படி பொருத்தப்பட்டது.

இவருக்கு ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு இருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் அவர் உடலில் இருந்த ஒவ்வாமை நோயால் மீண்டும் பாதிக்கப்பட்டார். இதனால் மீண்டும் இவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதேபோல் ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 39 வயது பெண்மணிக்கும் மருத்துவர்கள் குழுவின் உதவியுடன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2000ஆவது ஆண்டு முதல் 200 சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், 180 உறவினர்களிடம் பெற்றும், 20 மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாக பெற்றும் சிறுநீரக மாற்று அறுவை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேரறிவாளனை நீதிமன்றமே ஏன் விடுவிக்கக் கூடாது? - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Last Updated : Apr 28, 2022, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.