சென்னையிலிருந்து மதுரைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் இன்று காலையில் விமானம் மூலம் சென்றனர். சென்னை விமான நிலையத்தில் முக்கியப் பிரமுகர்களுடன் பாஜக தலைவர்கள் சிலரும் சென்றனர்.
அந்த விமானத்தில் விஐபிக்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். அதில், துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் அருகில் ஜன்னல் ஓர இருக்கையில் பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு அமர்ந்திருந்தார்.
இருவரும் அருகருகே அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை தனது செல்போன் மூலம் படம் எடுத்து, அதை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், ’துணை முதலமைச்சருடன் பயணித்ததில் பெருமை. நன்றி ஐயா’ எனத் தலைப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:என்னுடைய அரசியல் ஆசான் கருணாநிதி மட்டும்தான்! - குஷ்பு