சென்னை: தனியார் தொலைக்காட்சியில் வெளியான 'சரவணன் மீனாட்சி' தொடரில் வேட்டையனாக நடித்து, 'பிக்பாஸ் சீசன் 3'யில் போட்டியாளராகக் கலந்துகொண்டு தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார் 'பிக்பாஸ்' கவின். இவர் ஏற்கனவே நடிகை ரம்யா நம்பீசனுடன் 'நட்புனா என்னனு தெரியுமா' என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, இரண்டாவதாக அவர் நடித்துவந்த படம் 'லிப்ட்'. இதில் கவின், அமிர்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியாகாமல் இருந்தது.
திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு நிச்சயம் திரையரங்கில்தான் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட்டது படக்குழு.
அதன்படி இன்று (அக். 1) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகியுள்ளது. பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பார்த்தவர்கள் பாராட்டிவருகின்றனர். திரையரங்கில் வெளியாகியிருந்தால் நிச்சயம் இப்படம் சிறப்பான அனுபவத்தை அளித்திருக்கும் என்று கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க:சிவாஜிக்கு கூகுள் வைத்த டூடுல்