ETV Bharat / state

காட்பாடியில் பொறியியல் பராமரிப்புப் பணி: ரயில் நேரத்தில் மாற்றம் - ரயில் நேரம்

காட்பாடி பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் ரயில் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

katpadi section is in under maintainance  changes in train timing  chennai news  chennai latest news  காட்பாடியில் பொறியியல் பராமரிப்பு பணி  ரயில் நேரத்தில் மாற்றம்  பராமரிப்பு பணி  ரயில் நேரம்
பராமரிப்பு பணி
author img

By

Published : Jul 9, 2021, 10:31 AM IST

சென்னை: காட்பாடி பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் வரும் ஜூலை 13,15,17 தேதிகளிலும், 20 முதல் 26ஆம் தேதிகளிலும், மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை, அவ்வழித்தடங்களில் உள்ள ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதாவது காட்பாடியிலிருந்து 9.55 மணிக்குப் புறப்படும் யஷ்வந்த்பூர் - ஹவுரா சிறப்பு ரயில் 180 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும். 11 மணிக்குப் புறப்படும் யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயில் 120 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.

கே.எஸ்.ஆர் பெங்களூரு - காக்கிநாடா, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம், சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு, பெங்களூரு - எர்ணாகுளம், ஹவுரா - பெங்களூரு, தர்பங்கா-மைசூரு, காமகையா-யஷ்வந்த்பூர், டாடா நகர் - எர்ணாகுளம், பாடலிபுத்திரம்- யஷ்வந்த்பூர் உள்ளிட்ட 13 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல விழுப்புரம் - கரூர் சிறப்பு ரயில், வரும் 13ஆம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மேல்பாக்கம், திருத்தணி வழியாக வழி மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கமாக நின்று செல்லும் திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது.

இதையடுத்து புராலியா-விழுப்புரம் சிறப்புரையில் வரும் ஜூலை 12,16,19,23 ஆகிய தேதிகளில் மேலப்பாக்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக வழி மாற்றப்படுகிறது.

இதனால் காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட் மற்றும் திருவண்ணாமலை ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது.

மேலும் கராக்பூர்-விழுப்புரம் சிறப்பு ரயிலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மார்க்கத்தில் செல்வதால் காட்பாடி பகுதியில் நிற்காமல் செல்லும்.

இதனைத் தொடர்ந்து மங்களூரு - சென்னை சென்ட்ரல் ரயில், வரும் ஜூலை 12 ,14 ,16 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலான சேவைப் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னை சென்ட்ரல் - மங்களூரு சிறப்புரையில், ஜூலை 13, 15, 17, 20, 21, 22, 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் முதல் ஜோலார்பேட்டை வரை பகுதி அளவாக ரத்து செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஒளிப்பதிவுச் சட்டத்திருத்தம்: சூர்யாவுக்கு ஆதரவாக சீமான் அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.