சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் சந்தையில் ஏராளமான பொதுமக்கள் மீன்கள் வாங்க குவிந்தனர். ஆனால், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் குறைவாக இருந்ததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். மீன்பிடி தடைக்காலம் இருப்பதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் வரத்து குறைந்தே இருந்தது. பைபர் படகில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் குறிப்பிட்ட சில மீன்களே விற்பனைக்கு வந்தன. இதனால் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் மீன்களின் வரத்து குறைவாக இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
- வஞ்சிரம் - ரூ.800 (கிலோ)
- கவலை மீன் - ரூ.1,200 (கூடை)
- கானா கத்தி - ரூ.2,700 (கூடை)
இதையும் படிங்க: கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்