ETV Bharat / state

மீன்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

author img

By

Published : Mar 29, 2020, 5:29 PM IST

சென்னை: காசிமேட்டில் 144 தடை உத்தரவால் மீன்கள் வரத்து குறைந்த போதிலும் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

மீன்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்
மீன்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

கரோனா வைரஸ் எதிரொலியாக தமிழ்நாடு அரசால் 144 தடை விதிக்கப்பட்டிருந்தது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. மேலும் ஆங்காங்கே தடுப்பு வலைகளை அமைத்து காவல்துறையினர் பொழுதுபோக்கிற்காக வெளியே வருபவர்களை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று பொதுமக்கள் இறைச்சிகளை வாங்க சாலைகளில் கூட்டம் கூட்டமாக வருவதை ஆங்காங்கே காணமுடிகிறது. மீன்களுக்கு புகழ்பெற்ற சென்னை காசிமேட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மீன்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாக்க தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், வெளியே அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும்போது சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்றும் அரசு அறிவுரை கூறியது. ஆனால் மக்கள் அதனை சிறிதும் உணராமல் எந்தவித சமூக இடைவெளி இல்லாமல் மீன்கள் வாங்க சுற்றித் திரிவதை காணமுடிகிறது.

மேலும் ஒலிபெருக்கியின் மூலம் மீனவர் சங்கங்களை சேர்ந்தவர்கள் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், மக்கள் சமூக இடைவெளியுடன் நின்று மீன்களை வாங்கி செல்லுமாறும் அறிவுறுத்தினர். காசிமேடு கடற்கரைக்கு வரும் இரண்டு முகப்புகளிலும் காவல்துறையினர் தடுப்பு வளையங்களை அமைத்து இருந்தனர்.

இதுகுறித்து ஐக்கிய சபை மீனவர் சங்கத்தை சேர்ந்த வாசு கூறுகையில், தமிழ்நாடு அரசு கூறிய அறிவுரையின்படிதான் இங்கு மீன்கள் விற்பனையை நடத்தி வருகிறோம். காலை 7 மணி முதல் 10 மணி வரை இங்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீன்கள் விற்கும் வியாபாரிகள் மாஸ்க் அணிந்தவாறு விற்பனை செய்ய அறிவுறுத்தி இருக்கிறோம். காவல்துறைக்கும், அரசுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்றார்

இதையும் படிங்க: ஊரடங்கால் இருண்டுபோன உ.பி. விவசாயிகளின் வாழ்க்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.