சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிடம் (J.Jayalalithaa) சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்கக் கோரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு சார்பில் இன்று (ஜூலை 4) கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
1996ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வருமானத்தைவிட அதிக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் மூன்று பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக, ஜெயலலிதாவும் இதில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவர் மறைந்ததைத் தொடர்ந்து மற்ற மூவரும் 2017ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: Senthil Balaji case: "3வது நீதிபதியை விரைந்து நியமித்து உடனடியாக தீர்ப்பு வழங்குக" - உச்ச நீதிமன்றம் கோரிக்கை!
இதனைத்தொடர்ந்து, இந்த மூவரின் தண்டனைக் காலமும் நிறைவடைந்தன. இந்த நிலையில் இந்த வழக்கில் தங்கம், வைரம் உட்பட விலை மதிப்பு மிக்க பொருட்கள் போயஸ்கார்டன் வீட்டில் இருந்து 1996ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டன. 26 ஆண்டுகளாக இந்த பொருட்களெல்லாம் பெங்களூர் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலரான நரசிம்ம மூர்த்தி என்பவர், இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார்.
இதனைத்தொடர்ந்து, பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடக அரசு சார்பில் கிரண் எஸ்.ஜவாலியா என்பவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
அவ்வாறு ஏலம் விடுவதற்கான நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டதாக பட்டியிலிடப்பட்ட பல பொருட்கள் நீதிமன்ற கருவூலத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ். ஜவாலியா கூறும்போது, 30 கிலோ எடையுள்ள தங்கம், வைரம், மரகதம், ரூபி, முத்துகள் போன்ற ஆபரணங்கள் மட்டுமே இருப்பதாகவும், மீதமுள்ள 28 வகையிலான விலை உயர்ந்த பொருட்கள் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "பயங்கரவாதத்திற்கு நிதியுதவியை நிறுத்துங்கள்" - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி பேச்சு!
இதையடுத்து வழக்கின் மனுதாரரான பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிமன்ற ஆவணங்களை இணைத்து, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், 11 ஆயிரத்து 344 புடவைகளும், 250 சால்வைகள், 750 ஜோடி காலணிகள், விலையுயர்ந்த கடிகாரங்கள், பரிசு பொருட்கள் என 28 வகையிலான ஆயிரக்கணக்கான பொருட்கள் குறித்த தகவல் இல்லை எனவும், பொருட்களின் பட்டியலை இணைத்து, அவை லஞ்ச ஒழிப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால் அவற்றை கர்நாடகா நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் பின்வருமாறு:-
விலையுர்ந்த புடவைகள்
ஏசி
இண்டர்காம் டெலிபோன்
சூட்கேஸ்
கைக் கடிகாரம்
சுவர் கடிகாரம்
மின்விசிறி
அலங்காரமான நாற்காலிகள்
மேஜை
டிப்பாய் (டீ மேஜை)
கட்டில்
டிரஸ்ஸிங் டேபிள்
அலங்கார விளக்குகள்
சோஃபா செட்
காலணிகள்
உடைமாற்றும் அறையின் கண்ணாடி
வேலைப்பாடுகள் நிறைந்த கண்ணாடி டம்ளர்கள்
இரும்பு லாக்கர்கள்
சால்வைகள்
குளிர்சாதனப் பெட்டி
பணம்
டிவி
விசிஆர் (video cassette recorder)
வீடியோ கேமரா
சி.டி.பிளேயர்
ஆடியோ டெக்
டேப் ரெக்கார்டர்
வீடியோ கேசட்ஸ்
இது தவிர 468 முக்கியமான பொருட்கள்... வளையல், கைச்செயின், தோடு, நெக்லஸ், மூக்குத்தி, கத்தி, மயில், பன்னீர் சொம்பு, ரோப் செயின், சந்தன கிண்ணம், தங்க பேனா, தங்க சீட், தங்கத் தட்டு, குங்குமச்சிமிழ், ஒட்டியானம், மோதிரம், தங்க காசுமாலை, தங்க பெல்ட், தங்கத்தாலான கடவுள் சிலைகள், காமாட்சி விளக்கு, தங்க சாவி, தங்க மாம்பலம், தங்க வாட்ச் மற்றும் பல.
இதையும் படிங்க: Senthil balaji: செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!