சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு அண்மையில் விடுதலையான சசிகலா பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு, கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ், கர்நாடக அமமுக செயலாளர் சம்பத்துடன் இணைந்து சசிகலாவைச் சந்திக்க சென்றதாக வீடியோ ஆதாரத்துடன் தகவல் வெளியானது. சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் அவர்களை சந்திக்கவில்லை என கூறப்பட்டது.
யுவராஜ் சசிகலாவை சந்தித்தற்கான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் கட்சி அவர்மீது நடவடிக்கை எடுக்கும் என அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்திருந்த நிலையில், யுவராஜை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சசிகலா மீதான பயத்திலேயே ஜெயலலிதா நினைவு மண்டபம் மூடப்பட்டுள்ளது - உதயநிதி ஸ்டாலின்