ETV Bharat / state

பாடகியிடம் கைப்பை பறிப்பு: கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

சென்னை: பாடகியிடம் இருந்து செல்ஃபோன், மடிக்கணினி அடங்கிய கைப்பையை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை காவல் துறையினர் தீவரமாகத் தேடி வருகின்றனர்.

bag snatch
author img

By

Published : Jul 30, 2019, 3:29 PM IST

சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் சூரியகலா. இவர் கரோகி பாடகியாக உள்ளார். இவர் நேற்றிரவு (ஜூலை 29) தனது பணிமுடித்து, இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, அயனாவரம் அருகே வந்துகொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் சூரியகலா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். இதில் நிலைதடுமாறி சூரியகலா கீழே விழுந்தார். பின் அவரது கைப்பையை பறித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது. கீழே விழுந்ததில் சூரியகலாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இரவு ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த அயனாவரம் காவல் ஆய்வாளர் சூரியகலாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கைப்பையில் பணம், செல்ஃபோன், ஒரு மடிக்கணினி இருந்ததாக காவல்துறையினரிடம் சூரியகலா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஐசிஎப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:nullBody:சென்னை ஐசிஎப் பகுதியில் கரோகி பாடகி
சூர்யாகலாவை தாக்கி செல்போன் ,மடிக்கணினி,பறிப்பு.

4 பேர் கொண்ட கும்பல் தலைமறைவு. ஐசிஎப் போலீசார் விசாரணை.

சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் 9வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சூரியகலா வயது 34, கரோகி பாடகியாக உள்ளார். நேற்று இரவு 12 மணி அளவில் பணிமுடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் பொழுது அயனாவரம் பேருந்து நிலையம் வழியாக பில்கிங்டன் சாலை அருகே வரும் பொழுது பின்னால் ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் அவர் அணிந்து இருந்த கவரிங் செயின் பறிக்கும் போது அவரை கீழே தள்ளி தாக்கி விட்டு அவரது கைப்பையை பறித்து சென்றுள்ளனர். இதில் தலையில் காயமடைந்த அவரை இரவு ரோந்து பணியில் இருந்த அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் மீட்டு செம்பியம் பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சூரியகலாவை கீழே தள்ளிவிட்டு அவரது கைப்பையில் இருந்த 1500 பணம், 15 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு மடிகணினி ஆகியவற்றை பறித்து சென்ற மர்ம கும்பலை வழக்கு பதிவு செய்து ஐசிஎப் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.