ETV Bharat / state

கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு - வன்கொடுமை சட்டத்தை அமல்படுத்தாத அலுவலர்களுக்கு எச்சரிக்கை - கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை

தமிழ்நாட்டிலேயே உலுக்கிய கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை வழக்கில், காவல் துறை அலுவலர்களுக்கும் தண்டணையை வழங்கியது வன்கொடுமை சட்டத்தை அமல்படுத்தாத அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய பொதுச்செயலாளரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான டாக்டர்.வி.சுரேஷ் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் டாக்டர்.வி.சுரேஷ்

author img

By

Published : Jun 15, 2022, 10:47 PM IST

சென்னை: மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய பொதுச்செயலாளரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான டாக்டர்.வி.சுரேஷ் 'ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதளத்திற்கு' சிறப்புப்பேட்டி அளித்தார். அப்போது, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவரது மகன் முருகேசன்.

பட்டியல் சாதியைச் சேர்ந்த இவர் இளங்கலை பொறியாளர் படிப்பு படித்தவர். இவரும் அதே பகுதியில் உள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த துரைசாமி என்பவது மகள் கண்ணகி என்பவரும் காதலித்தனர். இருவரும் 2003 மே 5ஆம் தேதி கடலூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.

முருகேசன் - கண்ணகி திருமணம் செய்துகொண்ட விஷயம் பெண் வீட்டாருக்குத் தெரிந்ததால் அப்போதைய விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் கண்ணகியை முருகேசன் தங்க வைத்திருந்தார். அந்த நிலையில் கண்ணகி வீட்டார் முருகேசன் தந்தை சாமிக்கண்ணுவிடம் ’உன் மகன் கடன் வாங்கி உள்ளார். எனவே அவர் எங்கிருக்கிறார்’ என கேட்டு மிரட்டினர்.

கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்கள் 2003 ஜூலை 8ஆம் தேதி அன்று முருகேசனை பிடித்து வைத்தனர்.‌ மேலும் விழுப்புரம் மூங்கில்துறைப்பட்டில் கண்ணகி இருக்கும் இடத்தை அறிந்த அவரது உறவினர்கள் முருகேசன் பிடித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கண்ணகியை அழைத்து வந்தனர். மேலும் முருகேசனை தாக்கி அடித்துள்ளனர். ஆழ்துளைக்குழாய் கிணற்றிலும் தலை கீழாக தொங்கவிட்டுள்ளனர்.

விஷம் செலுத்தி கொலை: பின்னர் முருகேசன் , கண்ணகி ஆகிய இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச்சென்று விஷம் அருந்தி இறந்து விடுங்கள் என கூறியுள்ளனர். அதற்கு மறுக்கவே, இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷம் செலுத்தி அவர்களைக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்களின் சடலங்களை தனித்தனியாக எரித்தனர்.

முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். மேலும் இந்த குற்றச்செயலை மறைக்கும் நோக்கில் காவல் துறையினர் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் நக்கீரன் இதழில் முதலில் செய்தி வெளிவந்தது.

அதன் பின்னர் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அதில் முருகேசன் , கண்ணகி ஆகியோர் சாதி மறுப்புத் திருமணம் செய்ததால், அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பினரையும் கைது செய்தனர். முருகேசன் - கண்ணகி இருவரையும் சாதி ஆணவத்தில் கொலை செய்திருக்கலாம். எனவே, இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதையடுத்து, கடந்த 2004ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை சிபிஐ எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதனை விசாரித்த சிபிஐ அதே ஆண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை சிபிஐ குற்றவாளிகளாக சேர்த்தது. அப்போது முருகேசனின் தாயார் கண்ணால் கண்ட சாட்சியை சிபிஐ முதலில் சேர்க்கவில்லை. பின்னர் அவரை சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்த்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் டாக்டர்.வி.சுரேஷ்

இந்நிலையில் கடலூர் சிறப்பு நீதிமன்றம் ஆணவக் கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனையை உறுதிப்படுத்த, வழக்கை கடலூர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. அதேபோல தண்டனையை ரத்து செய்யக் கோரி 13 பேர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

விசாரணை இந்த மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், முதலில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதியப்பட்ட நிலையில், பின் கொலை வழக்காக பதியப்பட்டதாகவும், சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியங்கள் ஏதும் இல்லை எனவும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவர் பட்டியலினத்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது.

தண்டனை குறைப்பு சிபிஐ தரப்பிலும், முருகேசன் குடும்பத்தினர் தரப்பிலும், இந்த கொலை சம்பவத்திற்கு தொடர் சாட்சியங்கள் உள்ளதாகவும், இது ஆணவக்கொலை தான் என்பதால், கடலூர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்யவேண்டும் என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கில் ஜூன் 8ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்.

ஒன்பது பேருக்கு ஆயுள் உறுதி செய்தனர். கண்ணகியின் தந்தை துரைசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், அப்போதைய காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, அவர்களின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். துரைசாமியின் உறவினர்கள் ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரை விடுதலை செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையையும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர். கொலைகள் நிறைய நடக்கிறது. ஆனால், சாதி அடிப்படையில் நடந்த 2 பேர் கொலையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது ஆணவக்காெலை அல்ல. வெறுப்புக்கொலை என தான் கூற வேண்டும்.

அலுவலருக்கு குற்றச்செயலுக்கான தண்டனை: வன்கொடுமை சட்டத்தின்கீழ் இந்தியாவில் முதல்முறையாக 2 காவல்துறை அலுவலருக்கு குற்றச்செயலுக்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். இந்தியாவிற்கு முன்மாதிரியான வழக்கு. காவல் துறை அலுவலர்கள் மீதும் சட்டம் பாயும் என்ற தீர்ப்பாக அமைந்துள்ளது. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை சரியாக அமல்படுத்தாத அதிகாரிகள் மீதும் இது போன்ற சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதற்கான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

ஆதிக்க சக்தியில் இருக்கும் போது மற்ற சாதிக்காரர்கள் தடுக்க முடியாது.தலித்கள் விளிம்பு நிலைக்கு கீழ் பொருளாதாரத்தில் உள்ளவர்கள். ஆணவக்கொலை என்பது வெறுப்புக்காெலை. தலித் பெண்ணை மற்ற சாதியினர் திருமணம் செய்யும் போது ஆணவக்கொலை போன்றவை நடப்பது கிடையாது. மற்ற சாதிப்பெண்ணை தலித் திருமணம் செய்யும் போது தான் நடைபெறுகிறது.

ஆணாதிக்க சக்தியின் வலிமையும் இருக்கிறது. பாலியல் குற்றங்களும் நடக்கிறது. பெண்களை தனது சொத்தாக பார்க்கும் போக்காகத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

வன்கொடுமை தடுப்பு கடந்த 8 ஆண்டுகளில் 156 ஆணவ வன்முறைகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த அந்தப்பணியில் உள்ள அலுவலர்கள் முழுமையாக செயல்பட வேண்டும் எனவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சரியாக கையாளதா அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'என் உடையைக் கிழித்த போலீஸ்' - டெல்லியில் அவமதிக்கப்பட்ட கரூர் எம்.பி. ஜோதிமணி உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.