ETV Bharat / state

அதிமுகவுக்கு புத்திசாலிகள் வாக்களிக்க மாட்டார்கள்: துக்ளக் சொல்வதை ஏற்கிறதா அதிமுக? - admk against post duglak magazine

சென்னை: "அதிமுகவுக்கு புத்திசாலிகள் வாக்களிக்க மாட்டார்கள்" என்று துக்ளக் பத்திரிகை வெளியிட்ட கேலி சித்திரத்தை திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டு அதிமுகவிடம் எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.

kanimozhi
kanimozhi
author img

By

Published : Sep 10, 2020, 4:35 PM IST

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இறுதித்தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகளில் அரியர் வைத்திருந்து இந்த ஆண்டு தேர்வெழுதுவதற்காக கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அரசு அறிவித்தது. அதேபோன்று பல வருடங்களாக அரியர் வைத்திருந்து தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான கட்டண பதிவு செலுத்தியிருந்தால் கட்டாயம் தேர்ச்சி என்று ஆகஸ்ட் 26ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு வந்தாலும், அரியர் வைத்த கல்லூரி மாணவர்கள் முதலமைச்சர் பழனிசாமியை கொண்டாட ஆரம்பித்தனர். அரியர் மாணவர்களின் அரசனே என்று அனைத்து மாவட்டங்களிலும் கட்அவுட் வைத்தும், போஸ்டர் அடித்தும் தங்களது நன்றியை தெரிவித்தனர். ஒரு சிலர் வீடியோ மூலம் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்தனர். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு மாணவர்களின் ஆதரவு பெருமளவில் கிடைத்தது.

இந்நிலையில், துக்ளக் பத்திரிகையில் அரியர் மாணவர்கள் விவகாரம் குறித்தும் அதிமுகவை விமர்சிக்கும் விதமாக வெளியான கார்ட்டூன் சித்தரிப்பு கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

அதில், "பணம் கட்டியவர்கள் எல்லாம் ஆல் பாஸ்னு அறிவிச்சதாலே, அரியர் வைத்திருந்த மாணவர்கள் எல்லாம் நமக்குத்தான் ஓட்டுப் போடுவாங்கன்னு சொல்றீங்க. அதனாலே நல்லா படிச்சு மார்க் வாங்கின மாணவர்கள், நம்ம மேலே கோபப்பட மாட்டாங்களா?' இப்படி அறிவிக்கலைன்னா மட்டும் புத்திசாலிங்க நமக்கு ஓட்டுப் போடவா போறாங்க? என்ற வகையில் இடம்பெற்றுள்ளது.

இதனை திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் தளத்தில் அந்த கேலி சித்திரத்தை பதிவு செய்து, "அதிமுகவுக்கு புத்திசாலிகள் வாக்களிக்க மாட்டார்கள் என்கிறது துக்ளக். சுயமரியாதையை சொல்லித்தந்த பெரியார் படத்தை தங்கள் மேடைகளில் பயன்படுத்தும் அதிமுக இதற்கு என்ன சொல்லப்போகிறது? "அறிவாளிகள்" படிக்கும் பத்திரிகையில் வந்ததால் ஏற்றுக்கொள்கிறார்களா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

கனிமொழி ட்வீட்
கனிமொழி ட்வீட்

பாஜகவினர் வைக்கும் விமர்சனங்களுக்கு அதிமுக அதிரடியாக எதிர் கருத்துக்களை தெரிவிப்பதோடு கடும் விமர்சனத்தை முன்வைக்கும். ஆனால், தற்போது துக்ளக் பத்திரிகையில் வெளியான இந்த கேலி சித்திரத்திற்கு அதிமுக பதிலேதும் அளிக்காமல் இருப்பது துக்ளக் கூறுவதை ஏற்றுக்கொள்கிறதோ என்ற சந்தேகம் அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அரியலூர் மாணவன் தற்கொலை: ரூ. 7 லட்சம் நிவாரணம், ஒருவருக்கு அரசு வேலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.