டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நேற்றிரவு (பிப்.19) தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீது ABVP அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தற்போது எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்புத் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உட்பட மாணவர்கள் மீது ஏபிவிபி (ABVP) நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். வெறுப்பு அரசியலுக்கு அடிபணிந்த சில இளைஞர்களின் நிலையைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
இந்த வளாகத்தில் மாணவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் இது முதல் முறை அல்ல என்பது கவலையளிக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை நிர்வாகம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: JNU-வில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் - அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்