ETV Bharat / state

‘நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கிருக்கு!’ - கனிமொழி

சென்னை: சமஸ்கிருதத்திற்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கும் மத்திய அரசு, தமிழ் மொழிக்கு வெறும் நான்கு கோடிதான் நிதி ஒதுக்குகிறது என்றும், இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பெருங்கடமை நமக்கிருப்பதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

kanimozhi
author img

By

Published : Aug 5, 2019, 5:11 AM IST

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மகளிரணி சார்பாக, ‘சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்?’ என்னும் தலைப்பில் சென்னை ராயப்பேட்டையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், ‘தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நிதிகளை தமிழ்நாடு அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது வெட்கக்கேடு. செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிதி பற்றி இந்த அரசாங்கம் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய கனிமொழி, ‘மத்திய அரசு தமிழுக்கு வெறும் நான்கு கோடி தான் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், சமஸ்கிருத மொழிக்கு கடந்த ஆண்டு ரூ.400 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அவசர நிலையின் போது கூட யாரை எதிர்க்க வேண்டும் என்பது புரிந்தது. தற்போதுள்ள அரசியல் நம்மைச் சுற்றி எல்லா திசைகளிலும் மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகியவற்றை தன் பக்கம் எடுத்துக்கொண்டு அவர்களின் கருத்தியலை திணிக்க நினைக்கிறார்கள். நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது’ என உரையாற்றினார்.

Intro:Body:திராவிட இயக்கத் தமிழர் பேரவை மகளிர் அணி சார்பாக சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? என்னும் தலைப்பில் சென்னை ராயப்பேட்டையில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சிறப்பு உரை வழங்கி பேசினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில்,
தமிழ் உரிமையின் மொழி ஆகும். தமிழகத்தற்கு அனுப்பப்பட்ட கோடிக்கணக்கான நிதிகளை தமிழக அரசு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது வெட்க கேடு.
செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிதி பற்றி இந்த அரசாங்கம் வெள்ளை அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில்,
தமிழுக்கு வெரும் நூறு அல்லது நான்கு கோடி தான் நிதி ஒதுக்கீடு செய்கிறது மத்திய அரசு ஆனால் சமஸ்கிருத மொழிக்கு கடந்த ஆண்டு ரூ.400 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மக்களவையில் அரசை எதிர்த்து பேச கூடியவர்கள் தென்னகத்தில் இருந்து சென்றவர்கள் குறிப்பாக தமஉறுப்பினர்கள் தான்.

அவசர நிலையில் கூட யாரை எதிர்க்க வேண்டும் என்பது புரிந்தது. ஆனால் தற்போது உள்ள அரசியல் நம்மை சுற்றி எல்லா திசைகளிலும் மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் போன்றவையை தன் பக்கம் எடுத்துக்கொண்டு அவர்களின் கருத்தியலை திணிக்க நினைக்கிறார்கள். நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.