தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்துவருகின்றன.
இதுகுறித்து தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ”சாத்தான்குளத்தில் காவல் துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழ்நாடு அரசு சார்பில் நிதியுதவியும், அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
![கனிமொழி ட்வீட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01:17:04:1592984824_kanimozhi-latest-tweet_2406newsroom_1592984808_964.jpg)
இதையும் படிங்க:தந்தை-மகன் மரணம்: ரூ.2 கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தி கடையடைப்பு