தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் சந்தானகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கானது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி எம்பி, எம்எல்ஏ.க்களுக்கான பதவிகாலம் முடிந்த பின்பு தான் தேர்தல் வழக்கில் முடிவு காணப்படும் என்ற பொதுக் கருத்து நிலவுவதாகக் கூறிய அவர், தூத்துக்குடி தேர்தல் வழக்கை இழுத்தடிக்காமல் விரைந்து முடிக்க நீதிமன்றத்திற்கு உதவும்படி அனைத்து தரப்பிற்கும் அறிவுறுத்தி, நவம்பர் 14ஆம் தேதிக்குள் எழுத்து பூர்வமான வாதம் உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: விஞ்ஞானி உயிரிழந்த வழக்கு: 8 வாரங்களுக்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு