ETV Bharat / state

‘தண்ணீர் பிரச்னைக்கு அதிமுகவின் காழ்ப்புணர்ச்சியே காரணம்’ - கனிமொழி

சென்னை: திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீர் மேலாண்மை திட்டத்தை அதிமுக அரசு பராமரிக்காமல் விட்டதே குடிநீர் பிரச்னைக்குக் காரணம் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

kanimozhi
author img

By

Published : Jun 15, 2019, 7:19 PM IST

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக் காலத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்ததாகவும், அதை திமுக மீதான காழ்ப்புணர்ச்சியால் அதிமுக அரசு பராமரிக்காமல் விட்டதே தற்போதைய தண்ணீர் பிரச்னைக்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.

கனிமொழி செய்தியாளர் சந்திப்பு

அதேபோல், தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு சிந்திக்கவே இல்லை என குற்றம்சாட்டிய அவர், தண்ணீருக்காக மக்கள் தவித்துக் கொண்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

Intro:தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது பெண்கள் பாதுகாக்கக் கூடிய எந்த ஒரு செயல்பாட்டையும் அரசு செய்யவில்லை மத்திய மாநில அரசுகள் திணிக்க வேண்டும் என்று நினைக்க கூடிய விஷயங்களை தான் திணிக்கிறார்கள் தவிர மக்களை பாதுகாக்கவும் பெண்களை பாதுகாக்கவும் எந்தவித அக்கறையும் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது என கூறினார்

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசு சிந்திக்கவே இல்லை எல்லா தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய வகையில் தண்ணீர் பிரச்னை உள்ளது தண்ணீர் தொட்டிக்கு முன் எத்தனை குடங்கள் வைக்க முடியும் என்று கணக்கே இல்லை தண்ணீருக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து தண்ணீர் எடுக்கின்றனர் இதுபோன்ற சூழ்நிலை சூழலில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்

திமுக ஆட்சியில் சென்னை மக்களுக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார் ஆனால் இந்த அரசு அதை சிந்திக்காமல் திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் அதை செயல்படுத்தாமல் பராமரிக்காமல் விட்டதாலும் நீர் நிலைகள் சரியாக தூர்வாராமல் விட்டதால் தண்ணீர் பிரச்சனை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ஆனால் நிரந்தர தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை என தெரிவித்தார்

Conclusion:இவ்வாறு தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.