நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வரும் பாபநாசம் அனையின் நீர்மட்டம் 10 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. மக்களின் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படும் நீர், துர்நாற்றத்துடன் விநியோகிக்கப்படுகிறது. இதனால் மக்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து எம்பி கனிமொழி ட்விட்டர் பக்கத்தில், "பாபநாசம் அணை கட்டப்பட்ட காலம் முதல் தூர்வாரப்படாததால் அடிப்பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. அணையில் இறந்துள்ள மீன்களை அப்புறப்படுத்தி, அணையை தூர்வார தமிழ்நாடு அரசும், அலுவலர்களும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.